‘வாழை இலை’யும் ‘வாழவில்லை’யும்!
வாழை இலை விற்கும் இளம்பெண் ஒருத்தி, ‘வாழல, வாழல’ என்று கூறிக்கொண்டு போனாள். அவள் ‘வாழை இலை’ என்பதையே ‘வாழல’ என்று அவளுக்கே உரிய கூவி விற்கும் முறையில் கூறிக்கொண்டு போனாள்.
அவ்வாறு கூறிச் சென்றதை ஒரு புலவர் கேட்டார். இயல்பாகச் சிதைவுற்ற சொல் ஒலிப்பைக் கேட்ட அப் புலவர், நகைச்சுவையுடன் எழுதிய பாடல் இது:
கொண்கன் வெறுத்தனனோ? கூடியுளார் தாம்பகையோ?
பெண்மை இழந்தனளோ? பேசுவீர்! – பண்புடனே
வாழ மணம்பூண்ட வஞ்சி அவளின்று
வாழலையென் றேசொல் வகை.
அப் பெண் ‘வாழவில்லை’ என்பதையே ‘வாழல’ என்று சொல்வதாகக் கொண்டு எழுதிய பாடலின் சுவை எப்படி?
பெண்மை இழந்தனளோ? பேசுவீர்! – பண்புடனே
வாழ மணம்பூண்ட வஞ்சி அவளின்று
வாழலையென் றேசொல் வகை.
அப் பெண் ‘வாழவில்லை’ என்பதையே ‘வாழல’ என்று சொல்வதாகக் கொண்டு எழுதிய பாடலின் சுவை எப்படி?
No comments:
Post a Comment