Monday, 16 November 2015

செருப்பு’, விளக்குமாறு.......

ஒரு சமயம் திருமலைராயன் சபையில் இருக்கும் 64 புலவர்களில் ஒருவர் காளமேகத்திடம் ‘செருப்பு’, ‘விளக்குமாறு’
என்ற சொற்கள்
வரும்படி பாடலை இயற்றுமாறு சொன்னார்.
இந்த வார்த்தைகளைப் பொதுவாகப் பாடல்களில்
உபயோகிப்பது கிடையாது. இந்தச் சொற்கள் இடக்கர்
என்று சொல்லப்படும். காளமேகம் அசரவில்லை.
இதோ பாடல்…
செருப்புக்கு வீரர்களைச் சென்று உழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல –
மருப்புக்கு தண்மதன்
பொழிந்திறந்த தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே.
செருப்புக்கு = செரு + புக்கு = யுத்தகளத்திற்கு செல்லும்
யுத்தகளத்திற்குச் செல்லும் வீரர்களை ஜெயித்த
வேலவனைத் தழுவ ஆசை, ஒரு நாயகிக்கு.
தாமரை மேல் உட்கார்ந்து இருக்கும் வண்டைத்
தூதுவனாகச் சென்று தன்னுடைய
தாபத்தை விளக்குமாறு கேட்கிறாள்.
இது எப்படியிருக்கு?

No comments:

Post a Comment