Monday, 16 November 2015

பொம்பளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு !

பொம்பளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு !
====================================================
பெண்களைச் சிறுமைப் படுத்தியே வைத்திருக்கும் விருப்பம் ஆண்களிடம் ஆதி காலம் தொட்டே மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
பொது இடத்தில் ஆண்கள் வாய் விட்டுச் சிரிக்கலாம். ஆனால் ஒரு பெண் சிரித்தால், அவள் கண்ணியமான குடும்பத்திலிருந்து வருபவளாகக் கருதப் பட மாட்டாள் என்று ஒருதலைப் பட்சமாக ஆண் வர்க்கத்தால் தீர்ப்பு எழுதப் பட்டது.
வேதனையில் இருப்பவர்களைத் தான் சுலபமாகக் கட்டுப் படுத்தி ஆள இயலும். ஆனந்தமாக இருப்பவர்களிடம் அன்பால் சாதிக்க முடியுமே தவிர, அதிகாரம் செலுத்திக் கட்டுப் படுத்த முடியாது.
பெண்களை அடிமையாக வைத்திருக்க விரும்பிய வக்கிரமான ஆண் வர்க்கம், அவளைச் சிரிக்க எப்படி அனுமதிக்கும் ?
சந்தோஷமாகச் சிரிக்கும் பெண்ணுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடியுமே தவிர, அவளைத் தன் ஆளுமைக்குள் வைத்திருக்க முடியாது என்ற அச்சத்தினால் தான் ஆண்கள் இப்படி ஒரு முட்டாள் மொழியை உலவ விட்டனர் போலும்.
உலகின் ஜனத் தொகையில் பாதிக்கு மேல் உள்ள பெண்களைவேதனையிலேயே வைத்திருந்தால், ஆண்கள் மட்டும் எப்படி ஆனந்தமாக இருக்க முடியும் ?
இந்த பூமியில் அழும் பெண்களே வேண்டாம் ?
ஒரு பெண் மட்டுமல்ல, ஆணும் வாய் விட்டுச் சிரித்தால் தான் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தயாராகி விட்டதாக அர்த்தம்.
என் விருப்பம் எல்லாம் ஒன்று தான்.
பெண்கள் மனம் விட்டு ஆனந்தமாகச் சிரிக்க வேண்டும். அந்தச் சிரிப்பு ஆண்களிடமும், குழந்தைகளிடமும் தொற்றிக் கொள்ள வேண்டும் !
=====================================================
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் அருளுரை.

No comments:

Post a Comment