புதுச்சொல் புனைவோம்
=========================
FILE = அரம்
=========================
அரம் என்பது பழைய சொல் தான். திருவள்ளுவர் காலத்திலேயே இச்சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது
உட்பகை உற்ற குடி ( குறள் 888 )
அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
“அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்” என்பது பொருநர் ஆற்றுப் படை (பாடல் வரி 144) “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது (பாடல் வரி 35)
“ அர் “ என்னும் வேர்ச்சொல் அறுத்தற் கருத்தைக் குறிக்கும். அர் >அரம் > அராவும் இருப்புக் கருவி. அர் > அரா > அராவு. அராவுதல் = அரத்தால் அறுத்துத் தேய்த்தல் (ஆதாரம் : தேவநேயப் பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்)
இரும்பு போன்ற மாழைத் (Metal) துண்டுகளை அராவித் தேய்த்து, குறிப்பிட்ட வடிவத்திற்குக் கொண்டு வருவதற்கு அரம் பயன்படுகிறது. “ஃபைல்” என்னும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில் “அரம்” என்று சொல்கிறோம்.. அரத்தில் பல வடிவங்கள் உள்ளன .பல வகைகள் உள்ளன. அரத்தின் வடிவத்திலும் (Shapes) வகையிலும் (Grades) உள்ள வேறுபாடுகளை வறையறை செய்து தமிழில் புதுச் சொற்களைச் சூட்டிட இயலுமா ? இதைப்பற்றி ஆய்வு செய்து புதுச் சொற்களை அறிமுகப் படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.
FLAT, SQUARE, TRIANGULAR, ROUND, HALF – ROUND, போன்ற பல வடிவங்களில் (Shapes) அரங்கள் தயாரிக்கப் படுகின்றன. .அத்துடன், SMOOTH, , SECOND- CUT, ROUGH ,BASTARAD போன்ற . வகைகளிலும் (Grades) அவை தயாரிக்கப் படுகின்றன. வடிவம் மற்றும் வகைகளுக்குத் தக்கவாறு அரங்களுக்கு எவ்வாறு பெயரிடலாம் ? பட்டியலைப் பாருங்களேன் !
=================================
இவை எல்லாம் வடிவங்கள் (Shapes)
=================================
Flat File........................= தட்டை அரம்
Square File...................= சவுக்கை அரம்
Triangular File..............= முப்பட்டை அரம்
Half - Round File.........= பிறை அரம்
Round File...................= கம்பி அரம்
Safe Edge File.............= காப்பு விளிம்பு அரம்
Needle File..................= ஊசி அரம்
Cant File......................= கூர் வாங்கரம்
Knife Edge File............= வாண்முக அரம்
================================
இவை எல்லாம் வகைகள் (Grades)
================================
Smooth File.................= பதமை அரம்
Second Cut File...........= அணவு அரம்
Rough File...................= ஈனை அரம்
Bastard File.................= முடலை அரம்
Dead Smooth File.......= மீப் பதமை அரம்
Rasp File.....................= முள்ளரம்
Single Cut File............= ஒரு கொத்தரம்
Double Cut File...........= இரு கொத்தரம்

No comments:
Post a Comment